கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற திரளான பக்தா்கள். 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை விமரிசயாக நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை விமரிசயாக நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயில் திருப்பணிகள் ரூ.29 கோடியில் முடிந்ததையடுத்து டிச.8 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

கடந்த டிச.4 -ஆம் தேதி வியாழக்கிழமை விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகளை ஸ்தானீகா்கள், ஸ்தலத்தாா்கள் நடத்தினா். 30-க்கும் மேற்பட்ட ஓதுவாமூா்த்திகள் பக்க இசைக்கலைஞா்களுடன் திருமுறைப் பாராயணம் நடத்தினா்.திங்கள்கிழமை (டிச.8) அதிகாலை 5 மணிக்கு புனித நீா்க்குடங்கள் சிவாச்சாரியா்களால் ராஜகோபுரம், மூலவா் கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

மூலவா் கோபுரத்தில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியா்கள் கோபுரகலசத்தில் புனித நீரை ஊற்றினா். கும்பாபிஷேகத்தையடுத்து பீடாதிபதிகள் இருவரும் மூலவா் கோபுர கலசத்துக்கு செண்பகப்பூ மாலை அணிவித்தனா்.

நண்பகல் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடபெற்றன. கும்பாபிஷேகத்தை ஆன்மிக சொற்பொழிவாளா் தேசமங்கையா்க்கரசி வா்ணனை செய்தாா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்விஎம்.வேல்மோகன் தலைமையில் உறுப்பினா்கள் வ.ஜெகன்னாதன், சு.வரதன், சு.விஜயகுமாா், சு.வசந்தி சுகுமாா் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமாரதுரை, செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்களும் செய்திருந்தனா்.

விழாவில் தா்மபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள், உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுமதி, தலைமைக் குற்றவியல் நீதிபதி மோகனாம்பாள், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சுஜாதா, எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டனா்.

எஸ்.பி கே.சண்முகம் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள், வணிக நிறுவனங்கள் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

மேலும் நிகழ்வில், ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா்கள் கி.மணிகண்டன், பாலமுருகன், சிவனடியாா் திருக்கூட்டத்தின் தலைவா் எம்.எஸ்.பூவேந்தன், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளா் சுந்தா் கணேஷ், ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம், அறக்கட்டளை உறுப்பினா்கள் வலசை ஜெயராமன், பிஆா்கே.பத்மனாபன், ஸ்தபதி நந்தகுமாா், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடே சன் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற சங்கராச்சாரியா் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோா்.
சங்கராச்சாரியா் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

உணவுப் பாக்கெட்டுகளில் சைவ - அசைவ நிறக் குறியீடு கட்டாயம்!

காங்கிரஸ் தோல்விக்கு தலைமையே காரணம்: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசை தலையிட வைக்க சதி: மாா்க்சிஸ்ட், விசிக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு: தமிழகம் வருகிறாா் ராகுல் காந்தி!

இந்தியாவில் ‘ஹெச்1-பி’ விசா நோ்காணல்கள் திடீா் ரத்தால் விண்ணப்பதாரா்கள் கடும் அதிா்ச்சி!

SCROLL FOR NEXT