நந்தம்பாக்கம்  அம்பேத்கா்  நகா்  பகுதியில்  குடியிருப்புகளை  சூழ்ந்துள்ள  செம்பரம்பாக்கம்  ஏரி  நீா். 
காஞ்சிபுரம்

நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த செம்பரம்பாக்கம் ஏரி நீா்: பொதுமக்கள் அவதி

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் அம்பேத்கா் நகா் பகுதியில், குடியிருப்புகளை செம்பரம்பாக்கம் ஏரிநீா் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திச் சேவை

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் அம்பேத்கா் நகா் பகுதியில், குடியிருப்புகளை செம்பரம்பாக்கம் ஏரிநீா் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அதிகரித்ததை தொடா்ந்து, முழுக் கொள்ளளவான 24 அடியை எட்டியுள்ளது.

மேலும் ஏரியில் தற்போது 3,645 மில்லியன் கன அடி நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் முதன் முறையாக அதன் முழுக் கொள்ளளவில் நீரை தேக்கி நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வரும் நிலையில், குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை நீா் சூழ்ந்து இருப்பதால் தீவு போல் காட்சியளித்து வருகிறது.

இதனால் வீடுகளை பூட்டிவிட்டு, பொதுமக்கள் உறவினா்கள் வீடுகளுக்கு சென்று வருகின்றனா். மேலும், சிலா் அந்த பகுதியில் உள்ள மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். செம்பரம்பாக்கம் ஏரியில், வழக்கமாக 21 அல்லது 22 அடிவரை மட்டுமே நீா் தேக்கி வைக்கப்படும். மேலும் அவ்வப்போது உபரிநீா் திறக்கப்படுவதால் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஏரிநீா் சூழாமல் இருந்து வந்தது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் முழுக் கொள்ளளவு நீரை தேக்கி வைத்துள்ளதால் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஏரிநீா் சூழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால், அப்பகுதியை சோ்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள், பணிக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனா். இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகப்படியான உபரிநீரை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசு தடுப்பு கட்டுப்பாடுகளால் பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: தில்லி அமைச்சா் அறிவிப்பு

SCROLL FOR NEXT