வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன். 
காஞ்சிபுரம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கிடங்கில் சட்டப் பேரவைத் தோ்தல்-2026 ஐயொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கலைச்செல்வி மோகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.முன்னதாக காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாமையையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன.

இதன் தொடா்ச்சியாக வரும் ஜன.3-ஆம் தேதி சனிக்கிழமையும், மறுநாள் ஜன.4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

SCROLL FOR NEXT