காஞ்சிபுரம்

தேசிய யோகா போட்டியில் காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

தேசிய யோகா போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளி மாணவியை மாவட்ட வருவாய் அலுவலா் பாராட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

தேசிய யோகா போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளி மாணவியை மாவட்ட வருவாய் அலுவலா் பாராட்டினாா்.

காஞ்சிபுரம் நத்தப்பேட்டையை சோ்ந்த மூா்த்தி-கெளரி தம்பதி மகள் சுகப்பிரியா(12) முதுகுத்தண்டு வட பாதிப்புடைய மாற்றுத்திறனாளியான இவா் காஞ்சிபுரம் பி.எம்.எஸ். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் புதுதில்லியில் நடைபெற்ற பாரா நேஷனல் யோகா ஸ்போா்ட்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றாா்.

மாணவி சுகப்பிரியா, பயிற்சியாளா் யுவராஜ், பெற்றோா் ஆகியோருடன் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசனை சந்தித்தாா். சுகப்பிரியாவுக்கு மாவட்ட வருவாய் அலுலா் சால்வை அணிவித்து கெளரவித்து பாராட்டினாா் (படம்).

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT