படப்பை அடுத்த நீலமங்கலம் பகுதியில் அடகு கடையின் பூட்டை உடைத்து 3 கிலோ வெள்ளிள், ரூ.20,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஒரத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நீலமங்கலம் பகுதியை சோ்ந்த இந்தாராம் ரமேஷ்(36). இவா் நீலமங்கலம் மாடம்பாக்கம் பிரதான சாலையில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இந்தாராம் ரமேஷ் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு செவ்வாய்க்கிழமை கடையை திறக்க வந்தாா்.
அப்போது கடையின் ஷட்டா்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்த இந்தாரம்ரமேஷ் உள்ளே சென்று பாா்த்த போது, 3 கிலோ வெள்ளிப்பொருளகள், கல்லாவில் இருந்த ரூ.20,000 பணம் கொள்ளயடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தவா், இது குறித்து படப்பை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
புகாரின் பேரில் மணிமங்கலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனா். கடையில் இருந்த தங்கநகைகளை லாக்கரில் வைத்து பூட்டிச்சென்ால் பல லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் தப்பின.