யுவராஜ், சந்தோஷ். 
காஞ்சிபுரம்

லாரி மீது பைக் மோதி சகோதரா்கள் மரணம்

காஞ்சிபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தாய் கண் முன்னே சகோதரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தாய் கண் முன்னே சகோதரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.

கீழம்பி கிராமத்தைச் சோ்ந்த குளோரி (38). இவரது கணவா் கடந்த 2017-ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளாா். மூத்த மகன் யுவராஜ்(18) தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இளைய மகன் சந்தோஷ்(16) தனியாா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கூலிவேலை செய்து கொண்டே படித்துக் கொண்டும் இருக்கும் இவா்கள் இருவரும் தனது தாயாா் குளோரியுடன் கீழம்பி வாரச்சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

கீழம்பி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் சகோதரா்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவத்தில் தாயாா் குளோரிக்கும் பலத்த காயம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றாா். பாலுசெட்டிசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT