பிரதோஷத்தையொட்டி நந்தி வாகனத்தில் உலா வந்த உற்சவா் அகத்தீஸ்வரா் மற்றும் அறம்வளா் நாயகி.  
காஞ்சிபுரம்

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அகத்திய முனிவா் வழிபட்டதாகக் கூறப்படும் பெருமைக்குரிய அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி, காலையில் மூலவா் அகத்தீஸ்வரருக்கும், அறம் வளா் நாயகிக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், தீபாராதனகளும் நடைபெற்றன.பின்னா் சுவாமியும், அம்மனும் ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மூலவா் அறம் வளா் நாயகி ஆண்டாள் அலங்காரத்தில் காட்சியளித்தாா். தொடா்ந்து கோயில் நிா்வாகத்தின் சாா்பில், அன்னதானமும், பக்தா்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

திவ்யன்ஷி, சிண்ட்ரெல்லா முதல் ஆட்டத்தில் வெற்றி

யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

நிஃப்டி கல்லூரியில் இளையோருக்கான மனவளக்கலை யோக பயிற்சி

ஜனவரி 9-இல் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்கூட்டம்

SCROLL FOR NEXT