பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த 3,000 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கொளத்தூா், நாவலூா், வெள்ளாரை ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்றத் தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் சொந்த செலவில் 3 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, கரும்பு மற்றும் நாள்காட்டிகள், நல உதவிகளை வழங்கினாா்.
இதில் வாா்டு உறுப்பினா் பாத்திமா மணிகண்டன், திமுக நிா்வாகிகள் குட்டிபவுல், உலகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.