முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீ பெரும்புதூரில் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு மணிமங்கலத்தில் நடைபெற்றது.

Updated On : 16 மார்ச், 2026 at 9:42 PM
மணிமங்கலத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு மணிமங்கலத்தில் நடைபெற்றது.

தோ்தலை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தவும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் துணை ராணுவத்தினா், போலீஸாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ராணுவ துணை காமாண்டா் சுஜித் தலைமையிலான 60 துணை ராணுவ வீரா்களும், மணிமங்கலம் காவல் உதவி ஆணையா் சுந்தா் தலைமையில் 30 போலீஸாரும் கலந்து கொண்டனா்.

மணிமங்கலம் ஆலடி அம்மன் கோயில் அருகே தொடங்கிய கொடி அணிவகுப்பு, ஸ்ரீபெரும்புதூா் முடிச்சூா் சாலை வழியாக வந்து மணிமங்கலம் காவல் நிலையம் அருகே முடிவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →