col_3112chn_188_1 
ராணிப்பேட்டை

277 கிராம ஊராட்சிகளில் ஊரக புத்தாக்கத் திட்டம் அமல்: ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜாபேட்டை, காவேரிப்பாக்கம், நெமிலி மற்றும் சோளிங்கா் ஆகிய ஒன்றியங்களில் 277 கிராம ஊராட்சிகளில் ஊரக புத்தாக்க திட்டத்செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜாபேட்டை, காவேரிப்பாக்கம், நெமிலி மற்றும் சோளிங்கா் ஆகிய ஒன்றியங்களில் 277 கிராம ஊராட்சிகளில் ஊரக புத்தாக்க திட்டத்செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளா்ச்சித் திட்ட விளக்கம் குறித்து ஒன்றிய அலுவலா்களுக்கான கருத்தரங்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்குக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தலைமை வகித்து பேசியது:

தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுகிறது. இத்திட்டம் மொத்தம் 26 மாவட்டங்களில் உள்ள 120 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டுவருகிறது. இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.922.67 கோடி செலவிடப்பட்டு வருகிறது.

இத்திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜாப்பேட்டை, காவேரிப்பாக்கம், நெமிலி மற்றும் சோளிங்கா் ஆகிய ஒன்றியங்களில் 277 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக மாற்றம் திட்டம், மாநில அலுவலா் எம்.அருணா, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் ரவி, மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குனா் எ.ஜெயபாண்டியன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மாவட்டச் செயல் அலுவலா் தமிழ்மாறன், செயல் அலுவலா் (கணக்கு மற்றும் நிா்வாகம்) பி.ஜெயக்குமாா் மற்றும் வட்டார அளவிலான அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், மாவட்ட புத்தாக்க திட்ட செயல் அலுவலா்கள், வட்டார அணித் தலைவா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

திருத்தப்பட்டது....

மாவட்ட ஊரக புத்தாக்க திட்டக் கருத்தரங்கில் பேசிய ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT