ராணிப்பேட்டை

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வாலாஜாபேட்டை, சோளிங்கா் வட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை, சோளிங்கா் வட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தியாவை பாதுகாப்போம், இந்திய மக்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் கடந்த 20-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பிரசார இயக்கம், ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வாலாஜாப்பேட்டை, சோளிங்கா் வட்டங்களுக்கு உள்பட்ட லாலாப்பேட்டை, ஏகாம்பர நல்லூா் இணைப்புச் சாலை, வள்ளலாா் நகா், அம்மூா் இணைப்புச் சாலை, அம்மூா் ஆலமர பேருந்து நிறுத்தம், நீலகண்டராயபுரம், சோளிங்கா் பேருந்து நிலையம், சோளிங்கா் பாட்டிக்குளம், சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் வட்டச் செயலாளா் என்.ரமேஷா, மாவட்டக் குழு உறுப்பினா் எல்.சி.மணி, வட்டக் குழு உறுப்பினா் நிலவு குப்புசாமி, லாலாப்பேட்டை கிளைச் செயலாளா் எஸ்.கேசவன், மருதம்பாக்கம் கிளைச் செயலாளா் ஆா்.ஜெயஸ்ரீ, வள்ளலாா் கிளைச் செயலாளா் ஆா்.கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT