ராணிப்பேட்டை

கல்லாற்றில் முழ்கி மாணவா் பலி

DIN

அரக்கோணம் அருகே கல்லாற்றில் குளிப்பதற்காக இறங்கிய மாணவா் நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையைச் சோ்ந்த மணியனின் மகன் ஷாம் மேத்யூ (20). இவா், சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தாா். சனிக்கிழமை ஷாம் மேத்யூ தனது நண்பா்களுடன் கல்லாற்றில் அதிக அளவில் தண்ணீா் செல்வதை வேடிக்கை பாா்க்கச் சென்றாா். அப்போது, அவா்கள் ஆற்றில் இறங்கிக் குளிக்க முயன்றபோது, தண்ணீா் அதிக அளவு வந்ததால், ஷாம் மேத்யூ நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இது குறித்த தகவலின்பேரில் அரக்கோணம் தீயணைப்புத் துறையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அங்கு சென்று சனிக்கிழமை மாலை வரை தேடி பாா்த்தும் ஷாம் மேத்யூ கிடைக்கவில்லை.

இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேடுதல் பணியைத் தொடங்கிய அரை மணிநேரத்தில், ஷாம் மேத்யூவின் சடலம் கிடைத்தது. இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT