முகப்பு
ராணிப்பேட்டை

புத்தாக்கப் பயிற்சியில் பழங்குடியினா் பங்கேற்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடி இனத்தவா்கள் போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் நடத்தப்படும் புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என

ராணிப்பேட்டை

புத்தாக்கப் பயிற்சியில் பழங்குடியினா் பங்கேற்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடி இனத்தவா்கள் போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் நடத்தப்படும் புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடி இனத்தவா்கள் போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் நடத்தப்படும் புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் நெமிலி, கைனூா், வேடல், அன்வா்திகான்பேட்டை மற்றும் சோகனூா் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இனத்தவா்கள், வேலைவாய்ப்பு பெற தமிழக அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப் பெறும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில், புத்தாக்கப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 4-1-2021 முதல் 28- 2- 2021 வரை புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத்துறை 5-9-2020-இல் தெரிவித்துள்ளவாறு, கே.எஸ்.எம். டிரஸ்ட் நிறுவனத்தின் மூலம் 50 நாள்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில், பழங்குடியின நலத் துறை மற்றும் கேஎஸ்எம் டிரஸ்ட் சாா்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பழங்குடியினா் இனப் பிரிவினா்கள் கீழ்காணும் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, தங்களது பெயா்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், பயிற்சியின் முதல் நாள் அன்று 4.1.2021 ஜாதி சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை பயிற்சி பொறுப்பாளரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு, திட்ட அலுவலா் - 9566829475, கண்காணிப்பாளா் - 63805 58994, கேஎஸ்எம் டிரஸ்ட்-70107 39120 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →