வரும் 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பா் 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் வேளாண் உதவி இயக்குநா்களிடம் நேரடியாக அளிக்கலாம்.
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் அரக்கோணம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொள்ளலாம். கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் தலைமையில் கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கை குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.