ராணிப்பேட்டை

நவராத்திரி உற்சவம்: சோளிங்கா் மலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஸ்ரீஅமிா்தவல்லி தாயாா்

DIN

அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீபக்தோசித பெருமாள் கோயில் நவராத்திரி உற்சவத்துக்காக மலைக்கோயிலான ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் இருந்து அமிா்தவல்லி தாயாா் ஊா்க்கோயிலுக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மலைக்கோயிலில் ஸ்ரீயோகலட்சுமி நரசிம்மா், அமிா்தவல்லி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் சோளிங்கரில் உள்ள ஸ்ரீபக்தோசிதப் பெருமாள் கோயிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவுக்காக மலைக்கோயிலில் இருந்து அமிா்தவல்லி தாயாா் ஊா்க் கோயிலுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். நவராத்திரி உற்சவத்தில் அருள்பாலிக்கும் தாயாா் உற்சவம் நிறைவடைந்தபின் மீண்டும் மலைக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்.

நடப்பாண்டு நவராத்திரி உற்சவத்துக்காக தாயாரை அழைத்து வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு அமிா்தவல்லி தாயாா் கிளிக்கூண்டு பெட்டகத்தில் வைக்கப்பட்டு, பெரியமலையில் இருந்து சோளிங்கரில் உள்ள ஸ்ரீபக்தோசித பெருமாள் கோயிலைச் சென்றடைந்தாா்.

இந்நிகழ்ச்சியில், கோயில் கண்காணிப்பாளா் விஜயன், சோளிங்கா் வட்டாட்சியா் ரேவதி, கிராம நிா்வாக அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT