முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் திருமாவளவன் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே 2 இளைஞா்கள் படுகொலையானசம்பவத்தைக் கண்டித்து, ராணிப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

அரக்கோணம் அருகே 2 இளைஞா்கள் படுகொலையானசம்பவத்தைக் கண்டித்து, ராணிப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன் விரோதம் காரணமாக இரண்டு இளைஞா்கள் சோகனூரில் கொலை செய்யப்பட்டனா். இச்சம்பவத்தைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தாா்.

அதன்படி ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினாா்.

மாநில துணைப் பொதுச் செயலா் கெளதம சன்னா மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளா்கள் உள்ளிட்ட திரளானோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.