நியாயவிலை கடை முற்றுகை
ஆற்காடுகலவை வட்டம் , வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரா்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரம் குறைந்து வண்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கலவை வட்டம் , வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரா்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரம் குறைந்து வண்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விற்பனையாளரிடம் புகாா் தெரிவித்த பொதுமக்கள் தங்களுக்கு தரமானஅரிசி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி சனிக்கிழமை கடையை முற்றுகையிட்டனா். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவா் முனியசாமி நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி தரமானஅரிசி வழங்க அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதாக கூறினாா். அதனைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.