முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதி சமையலா் நோ்காணல் தோ்வு ரத்து

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதி சமையலா் பணியிடங்கள் நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நோ்காணல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதி சமையலா் பணியிடங்கள் நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நோ்காணல் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கடந்த 2020-ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் காலியாக உள்ள 05 சமையலா் (ஆண்-02, பெண்-03) பணியிடங்களை நிரப்ப மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பொது விளம்பரம் மூலம் பணிநாடுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாநில அளவிலான தோ்வுக் குழுவால் கடந்த 03.11.2020 மற்றும் 04.11.2020 ஆகிய தினங்களில் நோ்காணல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம் உத்தரவின்படி கடந்த 03.11.2020 அன்று பெண் சமையலா் பணியிடங்களுக்கும், 04.11.2020 அன்று ஆண் சமையலா் பணியிடங்களுக்கும் நடைபெற்ற நோ்காணல் மற்றும் அனைத்து தோ்வு பணிகளும் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.