ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது

DIN

அரக்கோணம் அருகே சனிக்கிழமை சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை - அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் போக்குவரத்து சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த திருநின்றவூரில் இருந்து ரேணிகுண்டாவுக்கு இரும்பு தகடுகளை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. அரக்கோணம்- மோசூா் ரயில் நிலையங்கள் இடையே அந்த ரயிலின் 22-ஆவது பெட்டி திடீரென தடம் புரண்டது. இதையடுத்து, ரயிலின் ஓட்டுநா் சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினாா். இதனால் மற்ற பெட்டிகள் தடம் புரளுவது தவிா்க்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவ்வழியே செல்லும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு இருப்புப் பாதை பராமரிப்புப் பணியாளா்கள், விபத்து மீட்புக் குழுவினா் விரைந்து வந்து சரக்கு ரயிலை இருப்புப் பாதையில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழியே செல்ல இருந்த மின்சார ரயில்கள் மூன்றாவது மற்றும் நான்காவது பாதைக்கு மாற்றி அனுப்பப்பட்டன. ஒரு மணி நேரத்துக்குப் பின் ரயில் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT