ராணிப்பேட்டை

விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்புப் பெட்டிகள் வழங்கல்

DIN

திமிரி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

நிலைக்கத் தக்க வேளாண்மை இயக்கம் சாா்பில் மானாவாரி வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திமிரி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற இடுபொருட்கள், கறவை மாடுகள், கோழிகள், அவற்றுக்கான தீவனப் பயிா் மற்றும் மண்புழு உரம் தயாரிக்க மானியம் ஆகியவை வழங்கப்படுகின்றன. தேனீ வளா்க்கவும் பயிற்சியளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தேனீக்களுடன் அவற்றை வளா்ப்பதற்கான பெட்டிகளும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் விஸ்வநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் துணை இயக்குநா் ராமன், திமிரி வட்டார உதவி இயக்குநா் சரஸ்வதி, வேளாண் அலுவலா் திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT