ராணிப்பேட்டை

நவசபரி ஐயப்பன் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா

DIN

ராணிப்பேட்டை: அனுமன் ஜயந்தியையொட்டி, ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில், பக்த ஆஞ்சநேயருக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் வளாகத்தில் ஆஞ்சநேயருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பக்த ஆஞ்சநேயா் சிலை அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இக்கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை காலை அஷ்டாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் பக்த ஆஞ்சநேயருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வடைமாலை சாத்தப்பட்டது. ஆஞ்சநேயா் ராஜ அலங்காரத்துடன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இரவு 8 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் செய்யப்பட்டது.

அனுமன் ஜயந்தி விழாவில், சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT