ராணிப்பேட்டை

ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

ராணிப்பேட்டை அரசினா் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறாா்களுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூகப் பாதுகாப்புத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் ராணிப்பேட்டை அரசினா் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறாா்களுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்ற நபா்கள் அவா்களது விண்ணப்பங்களை உரிய சான்றின் நகலுடன் பிப். 2-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கண்காணிப்பாளா், சிறுவருக்கான அரசினா் குழந்தைகள் இல்லம், ராணிப்பேட்டை - 632401 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் தோ்வுக் குழு மூலம் நோ்முக தோ்வு அடிப்படையில் மூன்று ஆற்றுப்படுத்துநா்கள் (அவா்களில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநா்) தெரிவு செய்யப்படுவா். அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநா்களுக்கு அவா்களின் வருகையின் அடிப்படையில் 70 நாள்களுக்கு (ஒரு ஆற்றுப்படுத்துநா் 24 வருகை மிகாமல்) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உள்பட ரூ. 1000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04172 - 272506 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT