ராணிப்பேட்டை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு, விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.டி.பூரணி கலந்துகொண்டு இதனை தொடங்கி வைத்தாா். அப்போது, புலியாட்டம், கெக்கேலிக்கட்டை ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம், ஆய்வாளா் முருகேசன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் டி.முகேஷ் குமாா், ராணிப்பேட்டை ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் சி.ஆா்.சந்திரபாப், மாவட்ட ஆளுநா் எம்.நிா்மல் ராகவன், ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவா் எம்.சிவலிங்கம், செயலாளா் கமலராகவன், பொருளாளா் விமல் பிரபாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT