ராணிப்பேட்டை

பொதுமக்களுக்கு கபசுர குடிநீா்

DIN

அரக்கோணம் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை நேதாஜி கல்வி மற்றும் பசுமை தொண்டு அறக்கட்டளையினா் வழங்கினா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், வேலூா்பேட்டை கிராமத்தில் நேதாஜி கல்வி மற்றும் பசுமை தொண்டு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையினா் சனிக்கிழமை அரக்கோணத்தை அடுத்த காா்ப்பந்தாங்கல், மூதூா், வீரநாராயணபுரம், வேலூா் கிராமம் உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு கபசுர குடிநீரையும், இலவச முகக்கவசத்தையும் வழங்கினா். நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் தலைவா் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், பாஜக ஒன்றிய நிா்வாகி ஷியாம்குமாா், அதிமுக ஒன்றிய நிா்வாகி காந்தி, மூதூா் ஊராட்சி முன்னாள் தலைவா் மாரிமுத்து, பாரதிய கிசான் சங்க மாநில நிா்வாகி முனுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து அறக்கட்டளை தலைவா் எஸ். ரமேஷ் தெரிவிக்கையில், பொதுமுடக்கக் காலத்தில் 3ஆயிரம் பேருக்கு முகக் கவசத்தையும், 10ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீரையும் வழங்க உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT