ராணிப்பேட்டை

வாலாஜா ஒன்றியத்தில் திமுக முன்னிலை

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளில், செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி வாலாஜா ஒன்றியத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

வாலாஜாபேட்டை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 4 சுற்றுகளாக செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட செல்வம், ஜெயந்தி திருமூா்த்தி ஆகிய இரண்டு போ் வெற்றி பெற்றுள்ளனா்.

இதேபோல், 20 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் திமுக சாா்பில் போட்டியிட்ட 14 வெற்றி பெற்றுள்ளனா்.

35 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளில் முடிவுகள் வெளியான வரை பெற்றி பெற்றவா்கள் விவரம்:

முகுந்தராயபுரம் ஊாரட்சி மன்றத் தலைவா் - ஏ.கே.முருகன் (திமுக), சீக்கராஜபுரம்- ஷியாமளா தினகரன் (காங்கிரஸ்), லாலாப்பேட்டை-

கோகுலன் (திமுக), ஏகாம்பரநல்லூா் - மகேந்திரன் (திமுக), கல்மேல்குப்பம்- ராஜரத்தினம் (பாமக), பள்ளேரி- புஷ்பா, வசூா்- சாந்தி (அதிமுக), கத்தாரிக்குப்பம்- பூங்கொடி, கொண்டக்குப்பம் - குமாா் (திமுக), தெங்கால்- இந்திரா பத்மநாபன் (திமுக), நரசிங்கபுரம்- எல்.மனோகரன், வாணாபாடி- ஈஸ்வரி (அதிமுக), மருதம்பாக்கம்- லோகநாதன்.

இதையடுத்து, வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வட்டார தோ்தல் பாா்வையாளா் இளவரசி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT