பருவமழை எதிரொலி: பாலாறு, பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 557 ஏரிகளில் 82 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 557 ஏரிகளில் 82 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப் பெரியாகவும், தமிழகத்தின் மூன்றாவது நீர்ப்பாசன பெரிய ஏரியாக விளங்கும் காவேரிப்பாக்கம் ஏரிக்கு தொடர் மழையின் மற்றும் பாலாற்று அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஏரியின் முழு கொள்ளளவை நீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வரும் 500 கனஅடி நீர்வரத்து ஏரியின் பாதுகாப்பு கருதி 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்கள்: துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
காவேரிப்பாக்கம் ஏரியை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 557 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 369 ஏரிகளும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 188 ஏரிகளும் பயனடைகிறது. இதனால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் மொத்த நீர் கொள்ளளவு 8.52 டிஎம்சி ஆகும். தற்போது நிலவரப்படி 4.88 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது.
மொத்தம் உள்ள ஏரிகளில் 82 ஏரிகள் 100% கொள்ளளவு அடைந்துள்ளது. 30 ஏரிகள் 75% தண்ணீரும், 43 ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீரும், 72 ஏரிகளில் 25 சதவீதம் தண்ணீர் அளவு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 144 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு கிழ் ஏரிகள் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாலாறு அணை கட்டிலில் இன்று காலை நிலவரப்படி 6 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இவற்றில் சுமார் 2 ஆயிரத்து 500 கன அடி நீர் காவேரிப்பாக்கம் மகேந்திரவாடி ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. 3,500 கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாலாறு மற்றும் பாலாறு அணைக்கட்டு காவேரிப்பாக்கம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கவும் ஆற்றைக் கடந்து செல்லவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.