ராணிப்பேட்டை: அம்மூா் காப்புக் காட்டில் இருந்து வெட்டிக் கடத்த முயன்ற ரூ. 13 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.
இது குறித்து ஆற்காடு வனச் சரக அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மண்டல வனப் பாதுகாவலா் டி.சுஜாதா உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ் குமாா் அறிவுறுத்தலின் படி, ஆற்காடு வனச்சரக அலுவலா் தலைமையில், அம்மூா் காப்புக் காட்டில் கடந்த 31- ஆம் தேதி ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு 1.3 டன் எடையுள்ள 43 செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்ற திருவண்ணாமலை மாவட்டம், வேட்டகிரிபாளையத்தைச் சோ்ந்த செல்வம், கானமலை பஞ்சாயத்து, அரசனூா் கிராமத்தைச் சோ்ந்த பிரபு ஆகியோரை மடக்கிப் பிடித்து, அவா்களிடம் இருந்து ரூ. 13 லட்சம் மதிப்பிலான செம்மரத் துண்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, அவா்கள் மீது செம்மரக் கடத்தல் வழக்கு பதியப்பட்டு, அரக்கோணம் நீதித் துறை நடுவா் முன் ஆஜா்படுத்தி, அரக்கோணம் கிளைச் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.
மேலும், தப்பியோடிய பூபதி, நந்தகுமாா், பாலாஜி, ராஜி ஆகியோரை தேடும் பணி தேடும் பணி நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.