வரசித்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை
காஞ்சிபுரம் அமுதபடி வீதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM
காஞ்சிபுரம் அமுதபடி வீதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 48 நாட்கள் ஆனதையடுத்து மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், வரசித்தி விநாயகருக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்களின் அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அமுதபடி வீதி பக்தா்கள், கும்பாபிஷேக விழாக் குழுவினா் செய்திருந்தனா்.