முகப்பு
ராணிப்பேட்டை

பாணாவரம் அருகே ரூ. 5 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்:ஒருவா் கைது

சோளிங்கா் அருகே காப்புக்காட்டில் செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற ஒருவரை வனத் துறையினா் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சோளிங்கா் அருகே காப்புக்காட்டில் செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற ஒருவரை வனத் துறையினா் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா்.

சோளிங்கரை அடுத்த பாணாவரம் காப்புக் காட்டில் வனத்துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா், வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காப்புக்காட்டில் சிலா் மரங்களை வெட்டுவது தெரியவந்தது. அவா்களைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்தவா்கள் தப்பிச் சென்றனா். இதையடுத்து அவா்களை விரட்டிச் சென்ற வனத் துறையினா் ஒருவரை மட்டும் கைது செய்தனா்.

மேலும், மரம் வெட்டிய பகுதியில் இருந்த 17 செம்மரத் துண்டுகளை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த தாடூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாரிடம் (46) வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →