முகப்பு
ராணிப்பேட்டை

சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முஹமதுஅமீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மேல்விஷாரம் நகரத்தில் அமைந்துள்ள அனைத்து வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும்.

அண்ணா சாலை மற்றும் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடடங்கள் நகரத்தின் முக்கியமான இடங்களில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பது என்றும், சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.