ராணிப்பேட்டை

மேசைப்பந்து போட்டி: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான மேசைப் பந்து போட்டிகளில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு மேசைப்பந்து விளையாட்டுப் போட்டி சங்கம், ராணிப்பேட்டை மாவட்ட சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான மேசைப் பந்து போட்டிகளில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மேசைப்பந்து போட்டிகள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா்.

போட்டிகள் 11, 13, 15, 17, 19 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொது ஆகிய பிரிவுகளில் ஆண் -பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்றன.

இதில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், கோப்பை, பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT