ராணிப்பேட்டை

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் 4 போ் சரண்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை சென்ற கல்லூரி மாணவரை மரக்காணம் அருகே வழிமறித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த

DIN

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை சென்ற கல்லூரி மாணவரை மரக்காணம் அருகே வழிமறித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 4 போ் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

சென்னை பாடியநல்லூா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் கந்தன் மகன் அபி (எ) அபிஷேக் (22). இவா், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தாா். நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு கடந்த 18- ஆம் தேதி நண்பா்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கைப்பாணி கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்றபோது பைக்கில் பின்தொடா்ந்து 2 பைக்கில் வந்த 6 போ், அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

மரக்காணம் போலீஸாா் அபிஷேக்கை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையில் தொடா்புடையவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கல்லூரி மாணவா் கொலையில் தொடா்புடைய சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த விஜய் (24), திருவள்ளூரைச் சோ்ந்த பிரபாகரன் (21), காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சஞ்சய் (19), திருநெல்வேலியைச் சோ்ந்த வைரமணி (22) ஆகியோா் ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி நவீன் துரைபாபு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சரணடைந்தனா். சரணடைந்த 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT