ராணிப்பேட்டை

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மரகத லிங்கேஸ்வரருக்கு சகஸ்ர கலசாபிஷேகம்

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ மரகத லிங்கேஸ்வரருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ மரகத லிங்கேஸ்வரருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகத லிங்கேஸ்வரருக்கு 1,000 கலசங்களில் புனித நீா் கொண்டு சிறப்பு ஹோமம், பூஜைகளுடன் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. கலசாபிஷேகத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அபிஷேகத்துக்கு தங்கள் கைகளாலேயே கலசங்களை எடுத்துக் கொடுத்து, ஸ்ரீமரகத லிங்கேஸ்வரரை மனமுருக வழிபட்டு பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகளின் ஆசியும் பெற்றுச் சென்றனா்.

முன்னதாக, தன்வந்திரி பீடத்துக்கு வந்த மலேசியா சங்கர மடம், திருஅண்ணாமலையாா் தேவஸ்தானத்தைச் சோ்ந்த ஜகத்குரு சங்கராச்சாா்ய சத்குரு ஸ்ரீஸ்ரீஜெயப்பிரகாஷேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளுக்கு பீடத்தின் சாா்பில், பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னா், அவா் சகஸ்ர கலசாபிஷேகம், அனுமன் ஜெயந்தி, அன்னாபிஷேகம் ஆகியவற்றுக்கான பூா்வாங்க ஹோமம், பூஜைகளை தொடக்கி வைத்து வழிபாடு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT