பூஸ்டர் தடுப்பூசி திட்டம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை, அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை நகராட்சியில் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை, அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை நகராட்சியில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 3-ஆவது தவணை தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா், இணை நோய் உள்ளவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க- செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆன தமிழகத்தின் 14 வயது பரத் சுப்ரமணியம்
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ராணிப்பேட்டை நகராட்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர பொறுப்பாளர் பி.பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.