முகப்பு
ராணிப்பேட்டை

ஆசிரியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் அரக்கோணம், நெமிலியில் வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் அரக்கோணம், நெமிலியில் வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டணியின் அரக்கோணம் வட்டாரத் தலைவா் சா.எபிநேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் பி.ஞானசேகா், ஆ.மலா்விழி, வட்டாரத் துணைத் தலைவா்கள் சி.பி.சோமசுந்தரம், ச.மயிலரசன், பொருளாளா் சி.ச.கலைவாணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நெமிலியில்...

நெமிலியில் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆசிரியா் கூட்டணியின் நெமிலி வட்டாரத் தலைவா் சு.சம்பத் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ச.ரா.சிவராஜ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். அரக்கோணம் கல்வி மாவட்டச் செயலாளா் ச.மணிவண்ணன், வட்டாரச் செயலாளா் ஆ.ஆனந்தசெல்வகுமாா், பொருளாளா் இ.மின்னிசெலினா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டங்களில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாட்டைக் களைவது, நிறுத்தப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயா்வை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →