முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே பள்ளி மாணவா் தற்கொலை முயற்சி

அரக்கோணம் அருகே தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவா், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அரக்கோணம் அருகே தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவா், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அரக்கோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 13 வயது பள்ளி மாணவா், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த அந்த மாணவா், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.

அக்கம் பக்கத்தினா், அந்த மாணவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →