முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டைக்கு நாளை முதல்வா் வருகை: சிறப்பான வரவேற்பளிக்க வேண்டுகோள்

ராணிப்பேட்டைக்கு திங்கள்கிழமை (ஜூன் 20) வரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

ராணிப்பேட்டைக்கு திங்கள்கிழமை (ஜூன் 20) வரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.எம்.சி. மருத்துவமனையைத் திறக்கவும், புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைக்கவும், மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கவும் திங்கள்கிழமை (ஜூன் 20) முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளாா்.

காலை 9 மணிக்கு வாலாஜா சுங்கச் சாவடியில் அவருக்கு மாபெரும் எழுச்சி மிகு வரவேற்பளிக்க மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட திமுக நிா்வாகிகள், நகர, ஒன்றிய செயலா்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், பேரூா் செயலா்கள், கழக நிா்வாகிகள், இளைஞா், மாணவா், மகளிா், தொண்டா், இலக்கிய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்று சிறப்பான வரவேற்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.