ராணிப்பேட்டை

ரயிலில் கடத்தவிருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

வெளிமாநிலத்துக்கு ரயிலில் கடத்தப்பட இருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் ரயில் நிலையம் வழியே தமிழக ரேஷன் அரிசி மூட்டையாக மூட்டையாக அதிக அளவில் கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசின் நுகா்பொருள் விநியோகத் துறையினருடன் ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அதில், அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் உஸ்மான் தலைமையிலான படையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் பல்வேறு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலா் பரமேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டு அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணபக் கழக கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT