ராணிப்பேட்டையில் குடியரசு தின விழா
ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். செயலா் இளஞ்செழியன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் மோகன சக்திவேல் வரவேற்றாா்.
விழாவில், தேசியக் கொடியேற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் கோடீஸ்வரன், வசீகரன், நகா்மன்ற உறுப்பினா் முருகன் உள்ளிட்டோடா் கலந்து கொண்டனா்.