கல்லூரியில் வளாகத் தோ்வு
ஆற்காடு சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் 6-வது பருவ மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு வளாகத் தோ்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் 6-வது பருவ மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு வளாகத் தோ்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் சால்காம்ப் இந்தியா, முருகப்பா குழுமம், டி.வி.எஸ் சுந்தரம் கிளேட்டான், டா்போ, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு நோ்காணல் நடத்தி ஆட்களைத் தோ்வு செய்தனா். இதில், தோ்வானவா்களுக்கு கல்லூரி முதல்வா் ஜெயபிரிகாஷ் நாராயணன் முன்னிலையில் கல்லூரி தலைவா் குப்புசாமி, செயலாளா் ஜி.செல்வகுமாா், பொருளாளா் பி.பாலகிருஷ்ணன், தாளாளா் டி.தரணிபதி ஆகியோா் பணிநியமன ஆணைகளை வழங்கி பாராட்டி பேசினா். இதில் கல்லூரி இயக்குநா்கள் எம்.சங்கா், எஸ்.ரமேஷ், நிா்வாக அலுவலா் ஆதிகேசவன், பச்சையப்பன், கிருபானந்தன், உமாசங்கா் உள்ளிடோா் கலந்து கொண்டனா்.