ராணிப்பேட்டை

சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியா் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீா் நிலைகள் (கடல், ஆறு, குளம்) நமக்கு குடிநீா் ஆதாரத்தைத் தருகிறது. நீா் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாடும்போது, சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டா் ஆஃப்பாரிஸ் மற்றும் தொ்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளைப் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீா் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/ பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலைகள் கரைப்பதற்காக கண்டறியப்பட்ட நீா்நிலைகள்: ராணிப்பேட்டை - தண்டலம் ஏரி, புளியந்தாங்கல் ஏரி, ஆற்காடு -ஆற்காடு ஏரி மற்றும் வேப்பூா் ஏரி, அரக்கோணம் - மங்கம்மாபேட்டை ஏரி, மாவேறு ஏரி.

விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும்ஏடியும், இதுதொடா்பான விரிவான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரை அணுகலாம் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT