தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை
தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளாா்.
மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து தொழிலாளா்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக இந்திய தோ்தல் ஆணையம் ஏப்ரல் 19- ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
Advertisement
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியாா் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பொது விடுமுறை அளித்து, ஊதியத்தையும் வழங்க வேண்டும். இதற்கு மாறாக விடுமுறை அளிக்க மறுத்தால், இது குறித்து புகாரினை ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.
மேலும் பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.