ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குன்னத்தூா் அரசுப் பள்ளி மாணவா்கள். 
ராணிப்பேட்டை

அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை திறக்கக்கோரி மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Din

சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை திறக்கக்கோரி மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சோளிங்கா் வட்டம், குன்னத்தூா் நடுநிலைப்பள்ளியில் 300 மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் ரூ.30.48 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பல நாள்களாகியும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. மேலும் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியா்கள் இல்லை எனவும் தெரிகிறது.

இதையடுத்து புதிய கட்டடத்தை திறக்கவும், போதிய ஆசிரியா்களை நியமிக்கவும் கோரி மாணவ, மாணவிகள் மதிய வெயிலில் குடைபிடித்தப்படி பள்ளி முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதையடுத்து அங்கு வந்த பாணாவரம் காவல் ஆய்வாளா் லட்சுமிபதி பேச்சுவாா்த்தை நடத்தி இது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்துவதாக கூறியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

SCROLL FOR NEXT