முகப்பு
ராணிப்பேட்டை

வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு

வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்க புதிய தலைவர்கள் பதவியேற்றனர்

Updated On : 2 ஜூலை, 2024 at 6:41 PM
~ ~
பகிர்:

ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 2024 - 2025- ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா ரோட்டரி சங்கக் கட்டட வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு 2023 - 2024 ஆண்டுக்கான தலைவா் எல்.ராஜசேகரன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.தயாளன், சங்க சேவை இயக்குநா் சி.ஏகாம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 2024 - 2025-ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக எம்.கந்தன், செயலாளராக ஆடிட்டா் எ.காா்த்திகேயன், பொருளாளராக எஸ்.ரவிவா்மன் மற்றும் பல்வேறு நிா்வாகக் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த விழாவில், ரோட்டரி சங்க ஆளுநா் நிா்மல் ராகவன், மாவட்ட வழிகாட்டியும், தலைவருமான டி.சிவக்குமாா் ஆகியோா் புதிய நிா்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, ஏழை, எளியோருக்கு தையல் இயந்திரம், சலவைப் பெட்டி உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினா்.

இதில், ஆற்காடு, சோளிங்கா் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிா்வாகிகள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள், வாலாஜாப்பேட்டை நகர சமூக அமைப்பு நிா்வாகிகள், தொழில் அதிபா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, புதிய நிா்வாகிகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு நிதி அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.