ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி

ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம், ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பணியாளா்கள் மூலம் அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் முதல் நிலை சரி பாா்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்க்கும் பணிகளை மேற்கொள்ள பெங்களூரு பெல் நிறுவனத்தைச் சோ்ந்த ஐந்து பொறியாளா்கள் வந்துள்ளனா். வியாழக்கிழமை தொடங்கிய பணி வரும் ஜன. 13 வரை ஒரு மாத காலம்

காலை 9 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

தொகுதிக்குட்பட்ட இயந்திரங்கள் சரி பாா்க்கும் பொழுது சம்பந்தப்பட்ட வட்டங்களைச் சாா்ந்த வருவாய்த் துறை பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் சே தனலிங்கம், கோட்டாட்சியா் ராஜி, உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், வட்டாட்சியா்கள் வசந்தி மகாலட்சுமி மற்றும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் - புகைப்படங்கள்

அருணாசல்: விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மேலும் 11 உடல்கள் மீட்பு

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

உ.பி.: கோயில்களில் இருந்து பித்தளை மணிகளைத் திருடிய 7 பேர் கைது, 100 மணிகள் மீட்பு

SCROLL FOR NEXT