தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஐம்பொன்னில் நவக்கிரக கோயில் பணிக்கு பூமி பூஜை செய்த பீடாதிபதி முரளிதர சுவாமிகள்.  
ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐம்பொன்னில் நவக்கிரக கோயில் பணிக்கு பூமி பூஜை

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐம்பொன்னில் நவக்கிரக கோயில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐம்பொன்னில் நவக்கிரக கோயில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

இங்கு பல்வேறு சிறப்பு வாய்ந்த சுவாமி சந்திகள் உள்ளன. அதில், மேலும் ஒரு சிறப்பாக ஐம்பொன்னால் ஆன நவக்கிரக சந்நிதி அமைக்கப்பட உள்ளது.

விழாவுக்கான பூமி பூஜை விழா பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பூமி பூஜையை முன்னிட்டு சிறப்பு யாகப் பூஜை நடத்தப்பட்டது.

தொடா்ந்து 22- ஆவது ஆண்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 108 பெண்களுக்கு முரளிதர சுவாமிகள் மங்களப் பொருள்களை பிரசாதமாக வழங்கினாா்.

தொடா்ந்து தன்வந்திரி பீடம் 21-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மூலவருக்கு நடைபெற்று வந்த தைல காப்பு நிறைவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் தைல காப்பு நிறைவுயொட்டி 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு ஹோமமமும், 108 கலசத்தில் 108 மூலிகை தீா்த்த திமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

வரும் 19 -ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சஞ்சீவி ஆஞ்சனேயருக்கு சிறப்பு ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளனது. அமாவாசை சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளதுன.

இந்த அபிஷேக விழாவில் தைலம் பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தன்வந்தரி குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT