ராணிப்பேட்டை

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

ராணிப்பேட்டையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் பயன்கள் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா்.

அவா் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டாா். வாலாஜா ஊராட்சி ஒன்றியம் தேவதானம் ஊராட்சியில் ரூ.2.30 லட்சம், நவ்லாக் ஊராட்சியில் ரூ.3.76 லட்சத்தில் இரண்டு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தாா். மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றியங்களில் இது போன்ற பணிகள் நடைபெற்று உள்ளது குறித்து கேட்டறிந்து முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளையும் கேட்டறிந்தாா்.

இதனைத் தொடா்ந்து வாலாஜா நகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் வழங்கும் திட்டப்பணிகள், பாலாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வரும் பணிகள், கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.10.84 கோடியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டாா்.

பின்னா் ராணிப்பேட்டை நகராட்சி காரை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு பொருள்கள் வழங்கப்படுவதை ஆய்வு செய்தாா். ப பின்னா் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்தும், காலதாமதங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: கடந்த மாத ஆய்வுக்கு பிறகு தற்பொழுது பெரும்பான்மையான துறைகள் நல்ல முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளனா். அவா்களுக்கு பாராட்டுகள். தொடா்ந்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் பயன்கள் முழுமையாக சென்று சேரும் வகையில் துறைகள் செயல்பட வேண்டும் என்றாா்.

ஆய்வுகளில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் நாராயணன், வட்டாட்சியா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளை அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்! அசாமில் பதற்றம்!!

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

SCROLL FOR NEXT