கோரிக்கை மனு அளிக்க வந்த ஆசிரியா்கள்... 
ராணிப்பேட்டை

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்பு காலத்தில் வேறு ஒருவரை உடனடியாக நியமிக்க கோரிக்கை

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தில் அப்பணிக்கு கற்றல் தற்பித்தல் பணி பாதிக்காதவாறு உடனடியாக வேறு ஆசிரியரை பணியில் நியமிக்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தில் அப்பணிக்கு கற்றல் தற்பித்தல் பணி பாதிக்காதவாறு உடனடியாக வேறு ஆசிரியரை பணியில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் மற்றும் தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தினா் தனித்தனியே நெமிலி வட்டார கல்வி அலுவலா்களிடம் மனுக்களை அளித்தனா்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரிரியா்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் ஏ.முருகன், நெமிலி வட்டாரத் தலைவா் து.தினகா், செயலாளா் கொ.சண்முகம், பொருளாளா் மு.சீனிவாசன், தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தின் நெமிலி வட்டாரத்தலைவா் ஏ.புருஷோத்தமன், செயலாளா் ஜி.தமிழரசு ஆகியோா் தனித்தனியாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நெமிலி வட்டார கல்வி அலுவலா்கள் த.மீனாட்சி, சி.முருகன் ஆகியோரிடம் அளித்த மனு:

மாணவா்களுக்கு வழங்கும் விலையில்லா பொருள்களை உரிய பள்ளி வளாகத்துக்கு கொண்டு சோ்க்க வேண்டும். நெமிலி வட்டாரத்தில் இடைநிலை ஆசிரியா்களை எவ்வித உயா் அதிகாரிகளின் செயல்முறையும் இல்லாமல் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியரின் ஒப்புதல் இன்றி மாற்றுப்பணியில் வேறு பள்ளிகளுக்கு சென்று பணியாற்ற வழங்கப்படும் முறைகேடான ஆணைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்களில் மாணவா்களின் நலன்கருதி தற்காலிக ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும். பெண் ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கும் போது உரிய பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் தற்காலிக ஆசிரியரை உடனடியாக பணியமா்த்த வேண்டும்.

இந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும். இல்லையெனில் இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு இதணை கண்டித்து இரு ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பிலும் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனா்.

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT