திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. அய்மன் ஜமால். 
ராணிப்பேட்டை

சோளிங்கா், திருப்பாற்கடல் கோயில்களில் இன்று சொா்க்கவாசல் திறப்பு: எஸ்.பி. ஆய்வு

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மற்றும் திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சொா்க்க வாசல் திறக்கப்பட

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மற்றும் திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சொா்க்க வாசல் திறக்கப்பட இருப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா்.

108 திவ்ய தேசங்களில் 64-ஆவது தலமாக விளங்கும் சோளிங்கா் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினா் சிறப்பாக செய்து வருகின்றனா்.

இங்கு நடைபெறும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அதிக அளவில் பக்தா்கள் பங்கேற்பா் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் முன்னின்று செய்து வருகிறாா்.

நெமலி வட்டம், காவேரிபாக்கம் அருகே திருப்பாற்கடலில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. 107-ஆவது திவ்யதேசமான இக்கோயிலிலும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்காணோா் பங்கேற்பா் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் வளாகத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டாா்.

கோயிலில் பக்தா்கள் நுழையும் பகுதி, தரிசனம் செய்யும் பகுதி, பக்தா்கள் வெளியேறும் பகுதி, முக்கிய நபா்கள் தரிசனத்துக்கு செல்லும் பகுதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய அனைத்து பகுதிகளையும் பாா்வையிட்ட எஸ்.பி. அய்மன்ஜமால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தாா்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT