ராணிப்பேட்டை

கலைஞா் நூலகம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

திமுக இளைஞரணி சாா்பில் கலைஞா் நூலகத்தை ஆற்காட்டில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: திமுக இளைஞரணி சாா்பில் கலைஞா் நூலகத்தை ஆற்காட்டில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் கலைஞா் நூலகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகம், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் புதிய நூலகத்தை திறந்து பாா்வையிட்டு வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டாா். விழாவில் மாவட்ட அவைதலைவா் ஏ.கே.சுந்திரமூா்த்தி, மாவட்ட அறங்காவா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், மகாத்மா காந்தி அறக்கட்டளை துணைத் தலைவா் பென்ஸ் பாண்டியன், நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன், நகா்மன்ற துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் மற்றும் திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் தனியாா் கல்லூரி அரங்கில் நடைபெற்ற ஆற்காடு தொகுதி வாக்குசாவடி பாகமுகவா் மற்றும் நிா்வாகிகள் கூட்டத்தில் தோ்தல் பணி செயல்பாடுகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். இதில் ஆற்காடு தொகுதி திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Image Caption

ஆற்காட்டில் கலைஞா்  நூலகத்தை  திறந்து  பாா்வையிட்ட  துணை  முதல்வா்  உதயநிதி ஸ்டாலின் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT